திங்கள், அக்டோபர் 17, 2011

.


காமன்வெல்த் விளையாட்டுக்கும் இந்திய முஜாஹிதீன் அமைப்புக்கும் என்ன சம்மந்தம் ?



இந்தியா சுதந்திரமடைந்து இதுவரையிலும் முஸ்லீம்கள் சம்மந்தப்பட்ட எந்த ஒரு செய்தியையும் இந்திய ஊடகத்துறை ஆராய்ந்து வெளியிட்டதே கிடையாது இவர்களின் இந்த ஒருநிலை சார்பால் தான் இந்தியாவில் பாசிச சக்திகளின் வேர் விருட்சமாக வளர்ந்தது.

முஸ்லீம்கள் சம்மந்தப்பட்ட எந்த செய்திகளையும் ஆராயாமல் வெளியிடுவதுடன் இன்னும் அதை மிகைப்படுத்திக் எழுதுவதென்றால் அவர்களுடைய ஸ்டைலில் அவர்களுக்கு சக்கரைப் பொங்கலாகவே இனிக்கும்.

இதற்கு பாபர் மஸ்ஜித் விவகாரம் தொடங்கி> மாலேகான் குண்டு வெடிப்பிலிருந்து இன்னும் ஏராளமான பயங்கரவாத சம்பவங்களை உதாரணமாகக் கூறலாம்.

சமீபத்தில் டெல்லி ஜூம்ஆ மஸ்ஜிதைப் பார்வையிட வந்திருந்த தைவான் நாட்டைச்சேர்ந்த சுற்றுலாப் பயணிகளின் மீது இருசக்கர வாகணத்தில் வந்த இருவர் துப்பாக்கியால் சுட்டு விட்டு ஓடிய சம்பவத்தை தடைசெய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் அமைப்பினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பம்பாயிலிருந்;து பிபிசி செய்தி நிறுவனத்திற்கு ஈமெயில் மூலம் தகவல் கிடைத்ததாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன.

அந்த ஈமெயில் தகவல் எட்டுப் பக்கங்களைக் கொண்டதாகவும் அதில் காஷ்மீரில் இரத்தம் ஆறாக ஓடிக்கொண்டிருக்கும்பொழுது டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளை  நடத்தி குதூகலமடைவீர்களா? என்றும் தைரியம் இருந்தால் நடத்திப்பாருங்கள் என்றும் சவால் விட்டிருந்ததாக செய்தி இடம் பெற்றிருந்ததாம் ?

அறிவுப்பூர்வமாக சிந்தித்தோம் என்றால் காஷ்மீரில் முஸ்லீம்களின் இரத்தம் ஆறாக ஓடுவதால் டெல்லியில் அதுவும் ஒரு முஸ்லீம் அமைப்பு பள்ளிவாசல் மைதானத்தை தீவிரவாத தாக்குதலுக்கு தேர்வு செய்யுமா ? அதை பொறுப்பேற்றுக் கொண்டதாக எந்த அமைப்பாவது ஒத்துக் கொள்ளுமா ?

இரட்டைகோபுர தாக்குதலுக்கு அல்கைதா பொறுப்பேற்றுக் கொண்டதாக ஜார்ஜ்புஷ் எடுத்த வாந்தியையே உலகின் சிலப் பாசிச ஊடகங்கள் தொடர்ந்து எடுத்துக் கொண்டிருக்கிறது.

பாவம் ஒருப் பக்கம் பழி ஒருப்பக்கம்
யார்; வேண்டுமானாலும் எத்தனை ஈமெயில் ஐடிகளையும் யாருடைய அனுமதியுமின்றியும் கிரியேட் செய்யலாம் என்பதால் இதுப்போன்று இந்தியாவில் எங்கு அசம்பாவிதம் நடந்தாலும் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் பேரில்> அல்லது இல்லாத இயக்கத்தின் பேரில் கிரியேட் செய்து தங்களின் ஆதரவுப் பத்திரிகை எதாவது ஒன்றிற்கு பொய்யானத் தகவலை அனுப்பி விட்டு தங்கள் விருப்பத்திற்கு நாசவேலையை செய்து முடித்து விட்டு ஹாயாக ஒதுங்கி விடுகின்றனர் மீதி வேலையை கச்சிதமாக பத்திரிகை பார்த்துக் கொள்கிறது.

உண்மை நிலவரம் என்ன ?
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை அறிவித்ததும் முதலில் எதிர்ப்புத் தெரிவித்தது பிஜேபி தான் அதற்கு அது எடுத்து வைத்தக் காரணம் சர்வதேச நாடுகள் கலந்து கொண்டு விளையாடும் காமன்வெல்த் போட்டி இந்தியாவில் நடைப்பெறுவதால் அதற்கு இந்தியர் ஒருவர் தலைமைப் பொறுப்பு ஏற்காமல் பிரிட்டிஷ் ராணி தலைமைப் பொறுப்பேற்று நடத்துவதை காரணம் காட்டி எதிர்ப்புத் தெரிவித்தது.

மேல்படி தேசப்பற்றாளர்களிடமிருந்து(?) இதுவரையிலும் அந்த எதிர்ப்புகள் பல வழிகளிலும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி பொறுப்பாளர்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது என்பதால் விளையாட்டுத் தொடங்கும் நேரத்தில் மேல்படி தேசப்பற்றாளர்கள்(?) அசம்பாவிதம் நடத்துவதற்கு திட்டமிட்டிருக்கலாம் என்றேத் தோன்றுகிறது.

ஏற்கனவே ஹைதராபாத் மக்கா மஸ்ஜித்> அஜ்மீர் தர்ஹா போன்ற இடங்களில் குண்டு வெடிப்புகளை அபினவ் பாரத் என்ற இந்து தீவிரவாத அமைப்பு நடத்தி விட்டு அதை முஸ்லீம் அமைப்புகள் மீதுப் பழியைப் போட்டது நினைவிருக்கலாம் மாலேகான் குண்டு வெடிப்பு அம்பலத்திற்கு வந்தப்பின்னரே இந்த பயங்கரவாத அமைப்பின் சூயரூபம் தெரிய வந்தது.

மாலேகான் குண்டு வெடிப்பில் முழுமூச்சாக செயல்பட்ட அபினவ் பாரத் என்ற இந்து பயங்கரவாத அமைப்பிற்கும் ஆர்.எஸ்.எஸ்> பஜ்ரங்தள் அமைப்பறிகும் நெருங்கிய தொடர்பு இருந்ததையும் அவர்களது சதி ஆலோசனையின் தொலைபேசி உரையாடலை அப்பொழுதே ஹெட்லைன்ஸ் டுடே அம்பலப்படுத்தியதும் நினைவிருக்கலாம்.

டெல்லி ஜூம்ஆ மஸ்ஜித் வளாகத்தின் துப்பாக்கி சூடும் அதை தடைசெய்யப்பட்ட இந்திய முஜாஹிதீன் அமைப்பு பொறுப்பேற்று ஈமெயில் வந்ததாக கூறும் தகவலைப் பார்க்கும் போது இது இந்து பயங்கரவாத அமைப்புகளின் சதியாகவே இருக்கலாம் என்ற சந்தேகம் வலுவாக எழுகிறது. இந்த பயங்கரவாதிகளின் சூழ்ச்சியிலிருந்து அப்பாவி முஸ்லீம்களை காக்க அல்லாஹ் போதுமானவன்.




وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்