வியாழன், அக்டோபர் 06, 2011

.


குஜராத் காவிகளின் தொடரும் கொலைவெறியாட்டம்.



சொரப்தீன் போலி என்கவுன்டர் வழக்கில் மூன்று ஐபிஎஸ் அதிகாரிகளுடன் பனிரெண்டுக்கும் மேற்பட்ட  போலீஸாரைத் தொடர்ந்து மந்திரி அமீதுஷாவும் சிபிஐ பிடியில் சிக்குவதற்கு ஆஸம்கான் என்பவரின் வாக்குமூலம் மிகவும் முக்கிய சாட்சியாக அமைந்திருந்தது.

இந்த நிலையில் ஆஸம்கான் உதய்பூரில் நடந்து சென்று கொண்டிருந்த பொழுது ஆளும் அரசின் குண்டர் படையினரில் சிலர் துப்பாக்கியால் சுட்டதில் எதேச்சையாக அவர் உயிர் தப்பி உள்ளார்.

இதன் மூலம் இதன் பின்னனியில் இன்னும் ஏராளமான குஜராத் அரசு அதிகாரிகள் சபர்மதி ரயில் எரிப்பு முதல் சொரப்தீன் போலி என்கவுண்டர் மற்றும் முஸ்லீம்களின் அனைத்துப் படுகொலைகளிலும்  உடந்தையாக இருந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது.

மோடியை கைது செய்து நடிவடிக்கை எடுப்பதற்கு ஏற்கனவே தெஹல்கா இணையத்தின் வீடியோப் பதிவு ஆதாரமாக இருந்தும் அதுப் போதிய ஆதாரமில்லை என்றுக்கூறி மத்திய அரசு பின் வாங்கியது.

மோடியின் மந்திரிசபையில் முக்கியப் பதவி வகிக்கும் அமீதுஷா கைது செய்யப்பட்டதும் மோடி வசமாக சிக்குவார் என்று உலகமே எதிர்பார்த்திருந்த வேளையில் அதையும் மத்திய  அரசு புஸ்வானமாக்கியது.

அமீதுஷாவின் மீது விசாரனையை முடுக்கிவிட்டு மோடியை கைது செய்யாமல் இருந்த காரணத்தால் சொரப்தீனுக்கு அடுத்து ஆஸம்கானை கொலை செய்ய திட்டம் தீட்டி உள்ளார்.

முஸ்லீம் இன விரோதியாகிய பிஜேபியின் காவி பயங்கரவாதி மோடி வெளியில் சுதந்திரமாக (முதல்வர் பதவியில்) இருக்கும் வரை முஸ்லீம்களின் மீதான கொலை வெறி தாகம் அவருக்கு அடங்கவே செய்யாது.

மோடி அரசை கலைத்து ஒழுங்கு நடிவடிக்கை எடுப்பதற்கு போதுமான ஆதாரங்கள் அடுக்கடுக்காக கிடைத்தப்பின்னரும் மத்திய அரசு இதில் மௌணம் காப்பது முஸ்லீம்களுக்கு மிகப்பெரிய அச்சத்தை ஏற்படுத்துகிறது.

இப்பொழுதாவது துரிதமாக செயல்பட்டு ஆஸம்கான் மீது துப்பாக்கி சூடு நடத்திய குண்டர்களையும், ஏவியவர்களையும் கண்டுப்பிடித்து நடிவடிக்கை எடுத்து காவி பயங்கரவாதிகளின் காட்டுதர்பாரிலிருந்து குஜராத்தை மீட்கவில்லை எனில் குஜராத் வாழ் முஸ்லீம்களுக்கு விடிவு காலம் கேள்விக் குறியாகி விடும்.

காங்கிரஸின் உறக்கம் எப்பொழுது கலையுமோ ?

குஜராத் முஸ்லீம்களுக்கு எப்பொழுது விடிவு காலம் பிறக்குமோ ?

அல்லாஹ் போதுமானவன். 



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்