திங்கள், ஏப்ரல் 16, 2012

.


மோடியின் ஊழல் மலிந்த நிர்வாகம்.

மோடியின் அரசாங்கம் ஒழுங்காக நடைபெறவில்லை: கணக்குத் தணிக்கை அறிக்கை குற்றச்சாட்டு

ஞாயிற்றுக்கிழமை, ஏப்ரல் 1, 2012, 10:14 [IST]

அகமதாபாத்: முதல்வர் நரேந்திர மோடி தலைமையிலான குஜராத் அரசின் செயல்பாட்டில் திருப்தியில்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட கணக்குத் தணிக்கை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

விதிமுறைகள், வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் குஜராத் அரசின் செயல்பாடு திருப்தியாக இல்லை. தன்னாட்சி பெற்ற 25 நிறுவனங்களில், 22 நிறுவனங்களின் கணக்குகளைத் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அதில் 2 நிறுவனங்களின் கணக்குகள் கடந்த 4 ஆண்டுகளாகத் தாக்கல் செய்யப்படவே இல்லை.
அரசின் பட்ஜெட்டில் 19 இனங்களில் ரூ.1,444 கோடி சேமிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ரூ.2,045 கோடி செலவிடப்படாமல் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 601 கோடி கூடுதலாகத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது அரசின் பட்ஜெட் தொடர்பான செயல்பாடு சரியில்லை என்பதையே காட்டுகிறது.

முறையான விளையாட்டுக் கொள்கை வகுக்கப்படவில்லை. பயிற்சியாளர்கள் அனைவரும் நிர்வாகப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலான விளையாட்டு விடுதிகள் செயல்பாட்டில் இல்லை.

குடிநீர்க் கொள்கையும் சரியாக வரையறுக்கப்படவில்லை. தேசிய நதி நீர்ப் பாதுகாப்புத் திட்டம் எந்தவிதமான ஆய்வையும் மேற்கொள்ளாமல் அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக நதியில் கலக்கும் மாசு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படவில்லை. சபர்மதி ஆற்று நீர் தூய்மைப்படுத்தும் திட்டத்தை முறையாகக் கண்காணிக்கவில்லை.

நகர்ப்புறங்களில் உள்ள 170 உள்ளாட்சி அமைப்புகளில் 158 அமைப்புகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு செய்வதற்கான நிலையங்கள் இல்லை. அரசு கையகப்படுத்திய 15,587 ஏக்கர் உபரி நிலங்களை தேவைப்படும் பயனாளிகளுக்கு முறையாகப் பகிர்ந்தளிக்கவில்லை.

நிர்வாகத்தை மேம்படுத்தவும், நில ஆவணங்கள் தொடர்பான விவரங்களைப் புதுப்பிக்கவும் அளிக்கப்பட்ட ரூ.71.8 கோடியை வருவாய்த்துறை பயன்படுத்தவே இல்லை என்று தலைமைக் கணக்குத் தணிக்கையாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://tamil.oneindia.in/news/2012/04/01/india-cag-raps-gujarat-failure-comply-with-rules-procedures-aid0216.html

முரண் பாட்டுகளின் மூட்டை மோடி

மேற்காணும் குஜராத் அரசின் தணிக்கையாளர் (சி.ஏ.ஜி) யின் அறிக்கையில் நரபலி மோடியின் ஊழல் மலிந்த நிர்வாகத்தை, சீர்கெட்ட நிர்வாகத்தை பட்டவர்த்தனமாக தோலுரித்துக் காட்டி இருக்கிறார் அதற்கு நேர் மாறாக அகில இந்திய பா.ஜ.க வின் தமிழக ஊதுகுழலாக செயல்படும் சோ.ராமசாமி கடந்த ஆண்டு நடத்திய மாடு மேயக் கூட மறுக்கும் துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் மோடி கலந்து கொண்ட பொழுது குஜராத்தின் வளர்ச்சிப் பணிகளை(?) சாதனைகளை(?) நரபலி மோடிப் பட்டியலிட்டதை அப்படியே கீழேத் தருகிறோம்.


மோடி பேசியதாவது. 'நான்-சோவின் ரசிகன்' என்றார். நாட்டில்-நெருக்கடி நிலை நடைமுறையில் இருந்தபோது- தமிழகத்தில் சோ.ராமசாமி எழுதிய 'இரண்டு கழுதைகள்' கதை குறித்து- எனது நண்பர்கள் மூலம்- அறிந்தேன். அப்போது தான் சோ குறித்து தெரிந்து கொன்டேன். தமிழக பாஜகவிற்கு-சோ' ராமசாமி ராஜகுருவாக இருக்கிறார்.
குஜராத்தில் என்ன சாதனைகள்- செய்தார் என்று அழகாகப் பேசினார். அவரின்-பேச்சு சோவின் பேச்சை விட நன்றாக இருந்தது.

'குஜராத்தில் தடையற்ற மின்விநியோகத்தை உறுதிசெய்ய, 'ஜோதிகிராம் திட்டம்' உருவாக்கப்பட்டு நிறைவேற்றபட்டது. இதன் மூலம் தற்போது 24மணி நேரமும் தடையற்ற மின் விநியோகம்-நடைபெறுகிறது. குஜராத்தில் வருவது ஆர்காடு-மின்சாரம் இல்லை, அது 24 மணி நேரம் வரும் மின்சாரம்.

தேர்தல் வரும்போது எந்த வேட்பாளரை நிறுத்தவேண்டும்? எப்படி ஓட்டு சேகரிக்க-வேண்டும்? என்பதை மறந்துவிட வேண்டும். எப்பொழுதுமே-மக்களுக்கு தேவையான தொண்டுகளை செய்ய வேண்டும். அதன் மூலம், மக்கள்-இதயங்களில் இடம்பிடிக்க வேண்டும். சமுதாயத்திற்கு என்ன பயன்பாடு-என்பது குறித்து சிந்தித்து பொது தொண்டு ஆற்றினால் தேர்தல் பற்றி கவலைப்பட தேவையில்லை தேர்தலில் வெற்றி தானாக தேடிவரும்.

700நாட்களில் 1400கீமீ தூரம் குழாய் போட்டிருக்கேன். அதில் கலைஞர் குடும்பத்துடன் காரில் போகலாம்; அவ்வளவு அகலம் என்றார்.

குஜராத்தில் தொலைத் தொடர்பு மற்றும் தகவல்-தொழில்நுட்பத்தை முழுமையாக செயல்படுத்துவதால் லஞ்சத்தை ஒழித்திருக்கிறோம்ழூ. அனைத்து துறைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக-இருப்பதாலும், எனதுஅறையில் இருந்து கொண்டே அனைத்தையும் கண்காணிக்க -முடிவதாலும் எங்கும் லஞ்ச, லாவண்யத்திற்கு இடமே இல்லை. மகாராஷ்டிரா-குஜராத் எல்லையில் வாகன பரிசோதனை செய்யுமிடம் (செக்-போஸ்ட்) உள்ளது. எங்களது எல்லையில் உள்ள செக்போஸ்டை 24மணி நேரமும் தகவல் தொழில்நுட்பத்தின் மூலம் கண்காணிப்பதால், மகாராஷ்டிரா மாநில செக்போஸ்ட் வருமானம் 200கம்மியாக கிடைக்கிறது, என்று ஒரு குண்டை தூக்கி போட்டார்.

'பெண்-கல்வியில் நாட்டிலேயே 20வது மாநிலமாக குஜராத் இருந்தது. தற்போது பெண் கல்வி அதிகரித்துள்ளது. மாணவர் சேர்க்கை 100 மூமாகியுள்ளது. பள்ளிகளிலிருந்து இடையில்படிப்பை நிறுத்தும் மாணவர்களின் விகிதம்-49 சதவீதத்தில் இருந்து 3சதவீதமாகக் குறைந்துவிட்டது. ஜூலை மாதம் 13, 14, 15 தேதிகளில் நல்ல வெயில் இருக்கும். மற்றவர்கள் சுவிஸுக்கு போகும்போது, நான் குக்கிரமத்துக்கு சென்று குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச்செல்வேன். விரைவில் 3, லிருந்து 0மூ ஆகும்,' என்றார். 2010க்குள் எல்லா கிரமத்துக்கும் அகலபட்டை வரும் என்றும் சொன்னார்.  http://www.youtube.com/watch?v=_vPnKFhIgbg&feature=player_embedded

பல நூரு கோடிக் கணக்கில் லஞ்சம்.
அனைத்து துறைகளின் செயல்பாடுகள் வெளிப்படையாக-இருப்பதாலும், எனதுஅறையில் இருந்து கொண்டே அனைத்தையும் கண்காணிக்க -முடிவதாலும் எங்கும் லஞ்ச, லாவண்யத்திற்கு இடமே இல்லை. என்றுக் கூறினார்.

குஜராத்தின் மீன்வளத் துறை அமைச்சர் புருஷோத்தம் சோலங்கி 58 நீர்நிலைகளின் மீன்பிடி உரிமைக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டதில் நேரடியாக 11 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதால் அரசுக்கு 440 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறி 2008ல் குஜராத் உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு அதை உயர்நீதி மன்றம் விசாரித்து ஊழல் நடந்தது உறுதி செய்யப்பட்டு மேல்படி உரிமங்களை ரத்து செய்து உத்தரவிட்டது.

இதை எதிர்த்து குஜராத் அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து உயர்நீதி மன்றத்தீர்ப்பை ரத்து செய்யக் கோரி அப்பீல் செய்தது.

மேல்படி மெகா ஊழல் நடந்திருப்பது உண்மை தான் என்பதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து அதை மூன்று மாதத்திற்குள் விசாரித்து உச்ச நீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மாநில கவர்னருக்கு உச்ச நீதி மன்றம் பொறுப்பு சாட்டி மோடியின் அரசு ஊழல் செய்யும் அரசு தான், ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கு மோடி துணை நிற்பார் அதை நியாயப் படுத்த உச்ச நீதி மன்றத்தையும் கருப்புப் பணத்தால் விலை பேச தயங்க மாட்டார் என்பதை உலகுக்கு உணர்த்திக் காட்டி உள்ளது உச்ச நீதி மன்றம்.

இதுவல்லாமல் மோடியின் சட்டப்பேரவையில் ஆபாச காட்சிகளைப் பார்த்த இரண்டு எம்.எல்.ஏ.க்களின் ஐபேடை வாங்கிப் பார்த்து அவர்கள் பார்த்தது ஆபாச காட்சிகள் தான் என்பதை உறுதி செய்யப்பட்டு சபாநாயகரால் சஸ்பென்ட் செய்யப்ட்டனர் என்பதையும் மக்கள் அறிவர்.

அவர்கள் மீது கடும் நடிவடிக்கை எடுக்கக் கோரி சட்டசபையில் தொடர்ந்து மூன்று நாட்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் குரல் எழுப்பியதால் சம்மந்தப்பட்ட ஐபேட்கள் தடயவியல் நிபுனர்களுக்கு அனுப்பப்பட்டு அதில் ஆபாச காட்சிகள் பார்க்கப்பட்டதற்கான ஆதாரம் இல்லை என்ற அறிவிப்பை(?) அவர்களிடமிருந்து பெற்று பிரச்சனைக்கு எளிதாக முற்றுப்புள்ளி வைத்து விட்டார் மோடி. இதெல்லாம் சமீபத்திய மோடியின் சாதனைப் பட்டியல்.

இதற்கு முந்தைய 2002ல் தாமே முன்நின்று நடத்திய முஸ்லீம்களுக்கு எதிரான கொலை வெறிக்கலவம்.

தன்னை எதிர்க்கும் நிர்வாகிகளை இடம் மாற்றம் செய்வது அல்லது என்கவுன்டரில் போட்டுத் தள்ளுவது என்ற சர்வாதிகாரப் போக்கின் பட்டியலும் நீண்டு கொண்டே செல்லும்.

பிரதமாராகப் போகிறோம் என்ற மமதையில் களப் பணியாற்றாமல் கணவில் மூழ்கித் திளைத்ததால் இடைதேர்தலில் மண்னைக் கவ்விய கேவலமும் சமீபத்தில் நடந்தேறியது.
இவற்றை எல்லாம் மறைத்து பாராளுமன்ற பிரதமர் வேட்பாளராக நிருத்தியே ஆக வேண்டும் என்று திட்டம் தீட்டி  டைம் பத்திரிகையை விலை பேசி சிறந்த 100 தலைவர்கள் பட்டியலில் ஊழல் நாயகன் மோடியை இடம் பெறச் செய்வதற்கான சதியும் நடக்கிறது.

அண்ணா ஹசாரேவின் உண்ணா விரதத்தை குஜராத்தில் நடத்தட்டும்


பாராளுமன்ற தேர்தல் வரை அண்ணா ஹசாரே குஜராத்தில் உண்ணாவிரதம் மேற்கொள்வது சிறந்தது உண்மையில் அவர் ஊழலை எதிரத்துப் புறப்பட்டவராக இருந்தால் இப்போதைக்கு அவர் தனது ஊழலுக்கு எதிரான பிரச்சாரத்தை உண்ணாவிரதத்தை குஜராத்தில் மேற்கொள்ளட்டும் இல்லை என்றால் தன்னை வயதான காலத்தில் சங்பரிவார் தான காங்கிரஸூக்கெதிராக களமிறக்கி விட்டது என்பதை பகிரங்கமாக அறிவிக்கட்டும்.


ஒரு வேளை பிரதம வேட்பாளராக நிருத்தப்பட்டு விட்டால் இந்தியாவில் வெரும் இரண்டு சதவிகிதம் உள்ள சங்பரிவாரங்கள் தவிற மீதமுள்ள சகோதரத்துவமும், சகிப்புத் தன்மையும் கொண்ட மக்கள் மோடியின் சுயரூபத்தை தெரிந்து கொண்டு குஜராத் இடைதேர்தலில் மண்ணை கவ்வச் செய்தது போல் பாராறுமன்ற தேர்தலில் மண்ணை கவ்வச் செய்து விட்டால் ஒட்டு மொத்த சங் பரிவாரமும் காணாமல் மறைந்து விடும்.

இது தான் இந்தியாவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

திங்கள், பிப்ரவரி 27, 2012

.

குஜராத் கலவரத்தில் மோடிக்கு பங்கில்லையாம் ? சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை !!




அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
 

மறக்க முடியாத இரத்தகரைப் படிந்த 2002ல் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டம் கூட்டமாக குஜராத்தில் கொலைகாரன் மோடியின் சதி திட்டத்தால் காவி பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதில் மத்திய அமைச்சர் இஹ்ஸான் ஜாப்ரியும் அடங்குவார் அதில் உயிர் தப்பிய அவருடைய மனைவி சுப்ரீம் கோர்ட்டில் தனது கணவரின் கொலைக்கு நீதி கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார் அதில் 62 பேருடன் மோடியையும் விசாரிக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
   
கடந்த 2009 ஆண்டு மோடியை விசாரிப்பதற்காக சிறப்பு புலணாய்வுக்குழுவை சுப்ரீம் கோர்ட் நியமித்திருந்தது. அந்த சிறப்பு புலணாய்வுக் குழு கடந்த 8-2-2012 அன்று மோடிக்கும் 2002 கலவரத்திற்கும் தொடர்பில்லை என்றும் மோடியை இந்த வழக்கில் சேர்க்க முடியாது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதுடன் மோடியை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கும் படியும் நீதிமன்றத்தை பரிந்துரைத்துள்ளதாக பத்திரிகை செய்திகள் கூறுகின்றன.

பிரதமர் நாற்காலியின் மீது கண்.
எப்படியாவது வருகின்ற 2014 பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் பதவிக்காக மோடியை நிருத்தியே ஆக வேண்டும் என்று பி.ஜே.பி.யை இயக்கும் ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவாரத்தினர் பிஜேபி தலைவர்களை விடாது நச்சரித்துக் கொண்டு வருவதை நாம் அறிந்து வருகிறோம்.

கொலை வழக்கில் மோடி சிக்கி இருப்பதால் தான் பி.ஜே.பி. காரர்களே மோடியை சமீபத்திய வட மாநில தேர்தல் பிரச்சாரத்திற்குக் கூட அனுமதிக்க வில்லை அதனால் தான் பிரதம வேட்பாளராகவும் நிருத்த முடிய வில்லை என்பதால் மோடியை மேல்படி கொலை வழக்கிலிருந்து விடுவித்தே ஆக வேண்டும் என்று முடிவு செய்து சிறப்பு புலணாய்வுக் குழுவினரை சரிக் கட்டி மோடிக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை அதற்கான ஆதாரங்கள் இல்லை என்றுக் குறிப்பிட்டு அறிக்கையை சமர்ப்பிக்க அன்டர்கிரவுன்ட் வேலை நடந்துள்ளது. 

இந்த அறிக்கை வெளியான அடுத்த நிமிடமே இனி பிரதமர் பதவிக்காக மோடி நிற்பதற்கு எந்த தடையும் இல்லை என்றும் வட மாநில தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபடுவார் என்றும் கட்காரி அறிவித்திருப்பது மேல்படி அறிக்கை பிரதமர் பதவிக்காக அவசரம் அவசரமாக பார்க்கப்பட்ட அன்டர்கிரவுன்டு வேலை தான் என்பதை சான்றுப் பகருகிறது.

நீதிபதிகளே பணத்திற்கு விலை போகும் இந்த காலத்தில் நீதிபதிகளால் நியமிக்கப்பட்ட சிறப்புக் புலணாய்வுக் குழுவினர் விலை போவது பெரிய மேட்டரா என்ன ? அதுவும் மோடியின் மகுடிக்கு முன் மண்டியிடாத அதிகாரிகளின் கடந்த கால நிலையை அறிந்தவர்கள் மண்டியிடத் தயங்குவார்களா

நேர்மையாக நடந்திருந்தால் ?

சிறப்பு புலணாய்வுக் குழு மட்டும் நேர்மையான முறையில் இந்த விசாரனையை நடத்தி இருந்தால் கலவரத்திற்கும் மோடிக்கும் தொடர்பில்லை என்று சொல்லவே முடியாது காரணம் 2002; கலவரத்திற்கு முதல் நாள் மோடி கூட்டிய போலீசார் சந்திப்பின் போது குஜராத்தின் உளவுத்துறை தலைவர் சஞ்சீவ் பட் ஐ.பி.எஸ் அவர்கள் மோடியால் வரவழைக்கப் பட்டிருந்தார்.

சங்பரிவார குண்டர்களை நான் தயார் பண்ணி விட்டேன் அதனால் நாளைய தினம் அவர்களால் முஸ்லீம் பகுதிகளில் கலவரம் நடக்கும் கலவரப் பகுதிகளிலிருந்து வரும் போன் கால்களை அட்டன் பண்ண வேண்டாம் அட்டன் பண்ணினாலும் மேல்படி இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று மோடிக் கூறியதை சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவிட் தாக்கல் செய்திருந்தார். தெஹல்காவை நாடகக் குழுவினர் என்று நீதிமன்றம் ஓரம் கட்டினாலும் பட்டின் வாக்கு மூலத்தை ஓரம் கட்ட முடியவில்லை.

பட் அந்த சந்திப்பில் இல்லை அவர் வரவழைக்கப்பட வில்லை என்று மோடி மறுத்ததும் இதை விசாரிப்பதற்கென்று மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரனை உச்ச நீதிமன்றம் நியமித்திருந்தது.

அதிரடியாக களத்தில் இறங்கிய ராஜூ ராமச்சந்திரன் அவர்கள் மோடி மறுப்பதில் ஆதாரம் இல்லை என்றும் மோடி உள்ளிட்ட குற்றம் சாட்டப்பட்ட யாரையும் இதிலிருந்து நீதிமன்றம் கன்டிப்பாக விடுவிக்கக் கூடாது அனைவரையும் குறுக்கு விசாரனை செய்தே ஆக வேண்டும என்றும் பட் அப்போதைய உளவுப் பிரிவுத் தலைவர் என்பதால் அவர் இல்லாமல்; போலீஸ் உயர் அதிகாரிகளை மோடியால் கூட்டவே முடியாது அவ்வாறு கூட்டினாலும் பட்டுக்குத் தெரியாமல் மாநில காவல் துறையால் அறவே இயங்க முடியாது என்பதால் மோடி மறுப்பதை நம்பத் தேவை இல்லை என்று திட்டவட்டமாக தனது அறிக்கையை எஸ்.ஐ.டி யிடம் ஒப்படைத்து விட்டார். 

2002 கலவரத்தில் எண்ணற்ற முஸ்லீம் உயிர்கள் பலியான அதே நேரம் 600 இஸ்லாமிய கட்டிடங்கள் (பள்ளிவாசல்கள், மதரஸாக்கள், மர்கஸ்கள்) உடைக்கப்பட்டதாகவும், தீக்கிறையாக்கப்பட்டதாகவும் கூறி அவற்றை புணர் நிர்மானம் செய்வதற்காக நிதி ஒதுக்கீடு செய்யும்படி குஜராத் இஸ்லாமிய சேவைக் குழு குஜராத் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த போது அதை விசாரித்த குஜராத் உயர்நீதி மன்றம் மோடியின் மெத்தனப் போக்கினால் தான் எண்ணற்ற உயிர்ப் பலிகளும், ஏராளமான பொருட் சேதமும் ஏற்பட்டன என்று அறிவித்திருந்தது.

கலவரத்தை தடுத்து நிருத்த சக்தி பெற்றிருந்தும் தடுத்து நிருத்தாததுடன் கலவரத்திற்கு  மோடியின்  பங்கு கனிசமான அளவு இருந்தது என்பதை அமெரிக்க உளவுத்துறை மூலம் அறிந்தே அமெரிக்கா மோடிக்கு விசா தர மறுத்தது.

மதவாதமும், பழிவாங்கலும்.

மோடி ஒரு மகா மோசமான மதவாதி என்பதுடன் தன்னை எதிர்ப்பவரை பழி வாங்குவதற்காக எதையும் செய்யத் தயங்க மாட்டார் என்பதற்கு கீழ்காணும் சம்பவம் சான்றுப் பகர்ந்து நிற்கிறது.

2002 கலவரத்திற்கு முதல் நாள் கூட்டப்பட்ட போலீஸ் சந்திப்பில் பேசப்பட்ட கலவரத்திற்கான திட்டமிடலை சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து விட்டார் என்றக் காரணத்தால் அவரைப் பழி வாங்குவதற்காக திட்டம் தீட்டினார் மோடி.

மோடியின் நிர்வாகத்தின் கீழ் பட் அவர்கள் உளவுத்துறை தலைவராக பணியாற்றிய போது சட்ட விரோத செயல்கள் எதாவது செய்துள்ளாரா என்று பூதக் கண்ணாடி இட்டுத் துலாவிப் பார்த்தார் மோடி ஆனால் எதுவும் கிடைக்க வில்லை. அதற்கு முந்தைய நிர்வாகத்தில் எதாவது தென்படுகிறதா என்று தேடினார் அதிலும் எதுவும் கிடைக்க வில்லை இவ்வாறே சடைவடையாமல் அதற்கு முன்பு அதற்கு முன்பு என்றுத் தேடி ஓடி இறுதியாக 21 ஆண்டுகளுக்கு முன் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள ஜம்ஜோத்பூர் காவல் நிலையத்தில் ஒரு காவல் கைதி இறக்கும் பொழுது அங்கே பட் துணை கமிஷனர் பொறுப்பில் இருந்தார் என்பது தெரிய வந்தது.

அதை வைத்து அவரை ஒரே அமுக்காக அமுக்கினார் அவர் வகித்த பதவியைப் பறித்து கைது செய்து உள்ளேத் தள்ளி சித்ரவதை செய்தவர் தான் இன்றைய தலைசிறந்த(???) நிர்வாகி என்று சங்பரிவாரத்தினரால் போற்றப்படும் மோடி என்று அண்;ணா ஹஸாரே குழுவில் இடம் பெற்றவரும் முன்னால் சட்ட அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான சாந்தி பூசன் ஏற்கனவே சொன்னதையும் இந்த நேரத்தில் இங்கே நினைவு கூறுகிறோம்.

பட் மட்டும் என்னை அப்பொழுது அணுகி இருந்தால் அவருக்கு சட்ட ரீதியாக என்னாலான உதவியை செய்து மோடியை இன்னும் சட்டத்தின் கிடுக்கிப் பிடியில் வசமாக சிக்க விட்டிருப்பேன் என்றும் சேர்த்தேக் கூறினார்.

மதவாதமும், பழிவாங்கும் போக்குடையவரால் மக்களை வழிநடத்தி செல்ல முடியுமா ? அதுவும் பல மதங்களைச் சார்ந்த மக்கள் வாழும் இந்தியாவில் இதற்கு சாத்தியமாகுமா ?

  • மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று குஜராத் உயர்நீதிமன்றம் சாடி உள்ளது,  
  • மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று சஞ்சீவ்பட் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்,
  • மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று மூத்த வழக்கறிஞர் ராஜூ ராமச்சந்திரன் விசாரித்து எஸ்.ஐ.டி. இடம் அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்,
  • மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷன் கூறி உள்ளார்,
  • மோடிக்கும் கலவரத்திற்கும் பங்கு உண்டு என்று தெஹல்கா ஆடியோ,வீடியோ மூலம் நிரூபித்துள்ளது.

இத்தனை ஆதாரங்கள் தௌளத் தெளிவாக இருந்த போதிலும் எப்படித்தான் எஸ்.ஐ.டி புலாணய்வுக் குழுவினரால் மோடிக்கும் கலவரத்திற்கும் தொடர்பில்லை என்று கூற முடிந்ததோ தெரியவில்லை ?  

பணம் பத்தும் செய்யும் என்பது இது தானோ ?

இந்திய தேசத்தின் மீது பற்றுள்ளவர்கள் சிந்திக்க கடமைப் பட்டுள்ளனர்.



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... அன்புடன் அதிரை ஏ.எம்.ஃபாரூக்

.


அப்பன் பாட்டன் காலத்திற்கு முந்தையது குஜராத் மதக்கலவரம். -மோடி

ஆடத் தெரியாதவளுக்கு முற்றம் கோணல்.


ஒருத் தொன்மை வாய்ந்த பாரம்பரியமிக்கக் கலாச்சாரத்தைப் பற்றிக் குறிப்பிடுவதைப்போல் கொஞ்சம் கூட வெட்கமில்லாமல் தான் ஆட்சி செய்த பொழுது உலகமே காரி உமிழ்ந்த வரலாறு காணாத இனச் சுத்திகரிப்பை திட்டமிட்டு நடத்தப்பட்டப் படுகொலைகளை இதைப் போன்று எங்க அப்பன் பாட்டன் காலத்திற்கு முன்பிருந்தே நடந்து வருகிறது இது குஜராத்துக்கு புதிதல்ல அதனால் இது ஒரு மேட்டரே அல்ல என்று எஸ்.டி.ஐ. சிறப்பு புலனாய்வுக் குழுவினரிடம் மோடிக் கூறி இருக்கிறார். 1714 லிருந்து இதுப் போன்ற சம்பவங்கள் நிறைய நடந்திருப்பதாகவும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

1714 லிருந்தே... 

இவர் குறிப்பிட்டுள்ள 17ம் நூற்றாண்டு காலம் 1707 வரை காபூலிலிருந்து தென்னிந்தியா வரை மதசார்பற்ற சிறந்த நிர்வாகத்தை ஒளரங்கசேப் நடத்திக் காட்டினார். அதைப்பொறுக்காத மராத்திய மத வெறியர்கள் சதி திட்டம் தீட்டி அவரை தீர்த்துக் கட்டி அவருடன் சேர்த்தே மதசார்பற்ற ஆட்சியையும் குழி தோண்டிப் புதைத்து விட்டு 1808 வரை மாறி மாறி மராத்திய மதவெறியர்களே ஆட்சி செய்தனர். 

1808 ல் கிழக்கிந்திய பிரித்தானிய கம்பெனிகளிடம் இந்தியா வீழ்ந்தப் பின்னர் பிரிட்டிஷாரின் ஆட்சிக்குட்பட்டக் காலத்தில் தேசப்பற்றுள்ள ஹிந்துக்கள் தவிற மதவெறிப்பிடித்த மோடி வகையறாக்கள் அனைவரும் பிரிட்டிஷாரிடம் இரகசியமாகச் சென்று உங்களுடைய எதிரிகளாகிய முகலாயர்கள் எங்களுக்கும் எதிரிகள் என்பதால் நாங்கள் உங்களுக்கு விசுவாசமாக நடந்து கொள்கிறோம் என்றுக்கூறி முகலாய சக்கரவர்த்திகளை காட்டிக்கொடுத்து அரச பதவிகளை அடைந்து கொண்டனர். அந்த சந்தர்ப்பத்தை சாதகமாக்கிக் கொண்டு அப்போதிருந்தே முஸ்லீம் இனச்சுத்திகரிப்பு வேலையை செய்யத் தொடங்கி விட்டனர். அதைத்தான் இப்பொழுது மோடி சுட்டிக்காட்டுகிறார் என்னைப் போன்ற அவர்களை எல்லாம் விட்டு விட்டு என்னை மட்டும் பிடிப்பது நியாயமாகுமா ? என்று கேட்கிறார். 

இந்தியா சுதந்திரமடைந்து பாகிஸ்தான் பிரிக்கப்பட்ட பொழுது இந்திய தேசத்தை நேசித்து இங்கேயே தங்கிக் கொள்ளும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று அப்போதைய பாரதப் பிரதமர் நேரு அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் முஸ்லீம்கள் இந்தியாவில் தங்கி விட்டனர். 

இந்திய அரசியல் சாசன சட்டத்திலும் சிறுபான்மை முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று தௌ;ளத் தெளிவாக சட்டம் வரையறுக்கப்பட்டு விட்டதால் அதனடிப்பiயில் ஆட்சி செய்வேன் என்று சத்திய பிரமானம் செய்தே ஆட்சிக்கு வந்தவர் மோடி என்பதால் சுதந்திரத்திற்கு முன் உள்ள நிலையை சுட்டிக்காட்டி தப்பிக்க நினைக்க முடியாது என்று மோடிக்கு பதவி பிரமானம் செய்து வைத்தவர்கள் விளக்க வேண்டும்.

சுதந்திரத்திற்குப் பிறகும்...

சுதந்திரமடைந்தப் பிறகும் முஸ்லீம்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று சட்டம் வரையறுக்கப்பட்டப் பிறகும் இந்தியாவில் பல மாநிலங்களில் எதிர்பாராமலும் அல்லது திட்டமிட்டும் பல கட்டங்களில் மதவெறியர்களால் முஸ்லீம் இனச் சுத்திகரிப்பு நடந்திருக்கின்றன அதில் ஏராளமான உயிர் பலிகளும் ஏற்பட்டுள்ளன அதை மறுப்பதற்கில்லை ஆனால் அப்போதைய ஆட்சியாளர்களால் இவரைப் போன்று ஒரு சாராருக்கு ஆதரவளித்து அவர்களைத் தூண்டிவிட்டு அதற்கு தேவையான உதவிகளும் பரிசுகளும் வெளிப்படையாக வழங்கப்படவில்லை.

ஆடத் தெரியாதவள் முற்றத்தை குறை கூறியதைப் போல் தான் இவருடைய பதில்கள் 2002 லிருந்து இதுவரை இருந்து வருவதை நடுநிலையாளர்கள் பார்த்து வருகின்றனர்.
தேசப்பற்றற்றவர்கள்.

பன்முகத் தன்மை கொண்ட இந்தியாவை எப்படி ஆட்சி செய்வது என்ற அடிப்படை அறிவு அறவே இல்லாமலும்> இந்திய தேசத்தின் தொன்மை வாய்ந்த வரலாறு மற்றும் இந்திய அரசியல் சாசன சட்ட விதிமுறைகள் அறவேத் தெரியாமலும் ஆட்சி செய்யப் புறப்படுபவர்கள் தான் மதவெறிப் பிடித்த மோடி வகையறாக்கள் என்பதற்கு மேற்காணும் மோடியின் கூற்று சான்றாக உள்ளது.

ஆங்கிலேயர்களின் ஆட்சி காலம் தான் இந்தியாவின் பொற்காலம் என்று சமீபத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகத்ராஜ் என்பவர் கூறியது அடுத்த சான்று. அதற்கு முந்தைய சான்றுகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது.    

தார்மீக பொறுப்பேற்று...

எதிர் பாராத விபத்து ஒன்று நடந்து அதில் சில உயிர்கள் பலியாகி விட்டாலே சம்மந்தப்பட்ட அந்த இலாக்காவைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் ( அதற்கு அவர் காரணமாக இல்லை என்றாலும் ) அதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதாக அறிவித்ததையும் விலகியதையும் பார்த்திருக்கிறோம்.

2002ல் நடந்த வரலாறு காணாத முஸ்லீம் இனப்படுகொலைகளை உலகளாவிய ஊடகங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் வன்மையாக கண்டித்திருக்கின்றன.

  • கலவர வழக்குகளை விசாரித்த உச்சநீதி மன்றம் மோடியை 'நவீன நீரோ' என கடுமையாக விமர்சித்திருந்தது.
  • இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நாடுகளின்  மனித உரிமை அமைப்புகள் கடுமையாக மோடி அரசை விமர்சித்தன.
அந்தளவுக்கு கடுமையான கண்டனக் கனைகள் கையாளாகாத மோடியை நோக்கிப் பாயந்தப் பின்னரும் ஒரு வார்த்தைக் கூட இதற்கு பொறுப்பேற்று நான் பதவி விலகுகிறேன் என்று இதுவரை இந்த சொரனைக் கெட்ட ஜென்மம் சொன்னதே கிடையாது. அந்தளவுக்கு பதவி வெறியும்> மத வெறியும் பிடித்த மனித மிருகம் தான் மோடி. 

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் முடிந்த அடுத்த நாள் பந்த்'துக்கு மோடியே சங்பரிவாரங்களை வெளிப்படையாக கூவி அழைத்தது ஒன்றுப் போதும் மோடியை கைது செய்து உள்ளேத் தள்ளுவதற்கு ஆனால் எதற்கும் கையாளாகாத காங்கிரஸ் அரசு இதையும் செய்யாது. 

ரயில் எரிப்பை கண்டித்து போராட்டக்காரர்கள் கடையடைப்பு அறிவிக்க வேண்டும் அதை அரசு தடுக்க வேண்டும் இது தான் நடைமுறை ஆனால் அரசே முழு அடைப்புக்கு அறிவித்து விட்டு போராட்டக்காரர்களைத் தூண்டுகிறது என்றால் இதுப்போதாதா ? 

இதற்காக விசாரனை என்றப்பெயரில் ஒருத் தொகையை வீணடித்துக்கொண்டு இருப்பதை இந்திய அரசாங்கம் நிருத்திக் கொண்டு இவரை கைது செய்து அதிரடி நடிவடிக்கை எடுத்து இவரால் மதசார்பற்ற இந்தியாவிற்கு உலக அரங்கில் ஏற்பட்ட கலங்கத்தை> தலைக் குணிவை நிவர்த்தி செய்ய முன் வர வேண்டும்.

காங்கிரஸ் அரசு முன் வருமா ? வரவே வராது !! பாம்புக்கு வாலும்> மீனுக்குத் தலையும் ஆட்டும் பாவலா காட்டும் ஸ்டைலை காங்கிரஸ் கை விடாது.


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். திருக்குர்ஆன்-3:104.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

சனி, டிசம்பர் 10, 2011

.


ஏகஇறைவனின் திருப்பெயரால்...

மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் குஜராத் போலீசுக்கு மோடி அறிவுரை !
 


கேட்பதற்கு ஆச்சர்யமாக இருக்கிறதா ? ஆச்சர்யப்பட வேண்டாம் ! கண்டிப்பாக அவ்வாறுக் கூறியது மோடி தான் வேறு யாருமில்லை.

2002ல் முஸ்லீம்கள் கொல்லப்பட்டு முஸ்லீம்களின் சடலங்கள்   குவியல் குவியலாக வீதி தோறும் குவிந்து காட்சி அளிப்பதற்கு காவி குண்டர்களுக்கு உத்தரவளித்து விட்டு அதைக் கண்டுகொள்ள வேண்டாம் என்று போலீஸ் உயரதிகாரிகளுக்கு உத்தரவிட்டதும் இதே மோடி தான். ஆனால் அதற்கும் இதற்கும் உள்ள வித்தியாசம் அது திறைமறைவில் கூறப்பட்டது, இது திறந்த வெளியில் கூறப்பட்டது.

போலீஸை திறைமறைவில் சந்திக்கும் போது அப்படியும் திறந்த வெளியில் சந்திக்கும் போது இப்படியும் மாற்றி,மாற்றித்தான் கூறுவார் காரணம் அவர் மனிதனில் பாதியும் மிருகத்தில் பாதியுமாக (மனித மிருகமாக) இருப்பதால் இப்படித் தான் கூறுவார்.
 
குஜராத்தில் கடந்த நவம்பர் மாதம் மாநில காவல்துறை அகாடமியின் சார்பில் நடைபெற்ற காவல் துணை ஆய்வாளர்களின் அணிவகுப்பின் போது உரை நிகழ்த்துவதற்கு அழைக்கப்பட்ட மோடி மேடை ஏறியதும் அவருக்கு முன் பத்திரிகையாளர்கள் கேமராவுடன் நின்றதைப் பார்த்து உணர்ச்சி வசப்பட்டவர் போலீஸாராகிய நீங்கள் மக்கள் மத்தியில் மனித நேயத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்று கூறிவிட்டார்.

ஆனாலும் போலீஸ் இந்த உபதேசத்தை உண்மை என்று நம்பி விட்டால் குஜராத்தில் மனிதநேயம் மலர்ந்து விட்டால் முதலில் கம்பி எண்ணுவது நாமாகத் தான் இருக்கும் என்பதை சட்டென உணர்ந்தவர் சுதாரித்துக்கொண்டு அதற்கடுத்து நாட்டில் பயங்கரவாதிகள் மற்றும் நக்சலைட்டுகளின் ஆதிக்கம் அதிகரித்து விட்ட நிலையை மக்களிடத்தில் போலீஸார் தெளிவுப்படுத்தி ஒருமித்தக் கருத்தை ஏற்படுத்த பாடுபட வேண்டும் என்று சேர்த்துக்கூறி உரையை முடித்து விட்டார். 

இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட நான்கு பேர் கொல்லப்பட்டது போலி எண்கவுன்டர் தான் என்று சிறப்பு புலணாய்வுக் குழுவினர் தகுந்த ஆதாரத்துடன் கூறிவிட்டதால் குஜராத் போலீஸ் அதை எதிர்த்து அறவே வாய் திறக்காதது கண்டு அவருக்கு தீராத வருத்தமாக இருந்து வந்தது அதனால் இனிவரும் காலங்களில் அதேப்போன்ற அப்பாவிகளை கொல்ல நேரிட்டால் கொல்லப்பட்டவர்கள் பயங்கரவாதிகள் தான், நக்ஸலைட்டுகள் தான் அவர்கள் கொல்லப்பட்டது சரிதான் அது என்கவுன்டர் தான் என்றக் கருத்தை மக்கள் மத்தியில் ஆழமாக விதைப்பதற்கு மற்ற அரசுத் துறைகளை விட போலீஸாராகிய நீங்களே சரியானவர்கள் என்பதை சூசகமாகக்கூறி முடித்தார் (தனியாகவும் அழைத்து சொல்வார்).

ஆனாலும் கேமராவுடன் நின்றிருந்த காவி பத்திரிகையாளர்கள் கொட்டை எழுத்துகளில் போலீஸாரை மனித நேயத்துடன் நடந்த கொள்ளும்படி மோடி வலியுருத்தினார் (2002 கலவரங்கள் தொட்டு சொரப்தீன், இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட போலி என்கவுன்டர் வரை மோடிக்கு சம்மந்தமில்லை போலீஸாரே அதற்கெல்லாம் காரணம் எனும் தொணியில் ) எழுதி தள்ளி விட்டனர்.

என்ன தான் சங்பரிவார பத்திரிகைகள் மோடியை மனித வர்க்கத்தை சேர்ந்தவராக காட்ட முயன்றாலும் உலக அரங்கில் அவர் மனித மாமிசம் உண்ணும் கழுகாகவே காட்சி அளித்து வருவதைக் கண்டு மேல்படி பத்திரிகையாளர்களே கலக்கத்துடன் இருந்து வருகின்றனர்.
 


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்

செவ்வாய், அக்டோபர் 25, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَإِذَا قِيلَ لَهُمْ لاَ تُفْسِدُواْ فِي الأَرْضِ قَالُواْ إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ
''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது ''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11



நரபலிமோடியின் உண்ணாவிரத நாகடம்.




அமைதி, ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி 72 மணிநேர உண்ணா விரதத்தை குஜராத் முதல்வர் நரேந்திரமோடி மேற்கொண்டுள்ளதை பத்திரிகைகள் பரபரப்பு செய்தியாக வெளியிட்டுக் கொண்டிருகின்றன.

அண்ணா ஹசாரேவை அம்போவென்று விட்டு விட்டு மோடி பக்கம் பல்டி அடித்து விட்டன பார்ப்பனப் பத்திரிகைகள்.

குஜராத் அமைதி இழந்து சமூக நல்லிணக்கம் கெடுவதற்கு வேறு யாராவது காரணமாக அமைந்து அதற்காக மோடி உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் உலகம் இவரது உண்ணாவிரதத்தை ஏற்றுக் கொள்ளும்.

காந்திப் பிறந்த மண்ணை சிறுபான்மை அப்பாவி முஸ்லீம்களின் இரத்தத்தால் தோய்த்து கலங்கப்படுத்திய கொலை வெறியன் இன்று சமூக நல்லிணக்கத்திற்காக உண்ணாவிரதம் இருக்கிறேன் என்றுக் கூறுவது  அதுவும் பத்தாயிரம் முஸ்லீம்களுடன் ? வேஷம் என்று உலகுக்குத் தெரியாதா ?

இந்த லட்சனத்தில் இது மதநல்லிணக்கத்திற்கு உலகுக்கே எடுத்துக்காட்டாம் ??? உலறுகிறது தினமலர். 

மதவெறியை தூண்டி மத நல்லிணக்கத்தை எவ்வாறு சீர் குலைப்பது  என்பதை குஜராத்தில் நிகழ்த்தி உலக சியோனிஸ்டுகளுக்கு க்ளாஷ் நடத்தியதை அவ்வளவு எளிதில் உலகம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டத? தினமலர்.  

நான் மட்டும் முதல்வராக இல்லை என்றால் நானே முஸ்லீம்களின் மீது குண்டுகளை வீசி கொன்றொழித்திருப்பேன் முதல்வர் பதவி என்னைத் தடுக்கிறது என்றுக் கூறி சங்பரிவார குண்டர்களுக்கு கொலைவெறி ஊட்டியதையயும், குஜராத்தின் காவல்துறை உயரதிகாரிகளுடன் ரகசிய அமர்வுக்கு ஏற்பாடு செய்து அதில் இரண்டு நாட்கள் சங்பரிவார குண்டர்களின் அட்டூழியத்தை கண்டு கொள்ள வேண்டாம் என்றும் மூன்றாவது நாள் என் பதவியை தக்கவைத்துக் கொள்வதற்காக கட்டுப்படுத்தி விடுங்கள் என்றுக் கூறியதை தெஹல்கா மோடியின் ஒரிஜினல் நரபலி முகத்தை தோலுரித்து உலகுக்குக் காட்டியதை உலகம் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்கும் என்று நினைத்து விட்டதாதினமலர்.    


பத்தாயிரம் அல்ல பத்து லட்சமும் அல்ல பத்து கோடி முஸ்லீம்களை திரட்டி பிரம்மாண்டமான சமூக நல்லிணக்க மாநாட்டை மோடி நடத்தினாலும் 2002ல் முஸ்லீம் பெண்களின் மீதான கற்பழிப்புகள் மற்றும் படுகொலைகளினால் மோடியின் மீது விழுந்த கொலை வெறியன் என்ற கரும் புள்ளி கரையவே கரையாது. குறைந்த பட்சம் நரேந்திர மோடி என்றப் பெயர் நரபலி மோடி என்ற மாறியதுக் கூட திரும்பி நரேந்திர மோடியாக மாறுவது கஸ்டம்.

காக்கை எத்தனை தான் விழுந்து விழுந்து குளித்தாலும் கொக்காக மாற முடியாது என்பதை மோடியும், மோடியை ஆஹா, ஓஹோ வென்று தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடும் பார்ப்பன பத்திரிகைகளும் விளங்கி கொள்ளட்டும்.

இந்தியாவின் மதசார்பின்மையை குழி தோண்டிப் புதைத்து உலக அரங்கில் இந்தியாவை தலைகுணியச் செய்த கயவர்கள் ஒன்று விடாமல் துடைத்தெறியப்படாத வரை இந்தியாவில் அமைதி, ஒற்றுமை, மற்றும் சமூக நல்லிணக்கத்தை ஒருக்காலும் நிலை நாட்டவே முடியாது.



முஸ்லீம்களின் பங்கு

குஜராத்தின் ஐந்து மண்டலங்களிலிருந்து தலா இரண்டாயிரம் முஸ்லீம்களை கொண்டு வந்து சேர்ப்பதை குஜராத் சிறுபான்மை அமைப்புத் தலைவர் தன்வீர் சேட்டிடம் பொறுப்பை ஒப்படைத்து கவனிக்க வேண்டிய முறையில் அவரை கவனித்ததால் அவர் முஸ்லீம்களிடம் சென்று 2002 நிகழ்வுகளை நினைவுபடுத்தி வலுக்கட்டாயமாக கொண்டு வந்து சேர்த்துள்ளார் என்பதுவே நிதர்சனமான உண்மை.

காரணம் 2002  முஸ்லீம்களின் படுகொலைக்குப் பிறகு நடந்த சட்டமன்ற தேர்தலிலும் கூட அதிக வாக்குகுள் முஸ்லீம் தொகுதிகளில் கிடைத்ததாக தகவல் அப்பொழுதே வெளியாகின அந்த ஓட்டுகள் விழுந்தவைகள் அல்ல விழ வைத்தவைகள் என்பது உலகுக்கேத் தெரியும் இதிலிருந்தே மேல்படி நாடக அரங்கில் கலந்து கொண்ட முஸ்லீம் ஆண், பெண்கள் அனைவரும் தாமாக பங்கேற்க வில்லை, பங்கேற்க வைத்துள்ளனர். 

விரும்பினால் வரலாம் என்று மட்டும் கூறி இருந்தால் தன்வீர் சேட் கூட நாடக மேடையில் கலந்திருக்க மாட்டார்.

அனைவருக்கும் நீதி ?
எனது மாநிலத்தில் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். நாட்டில் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஏற்படும் வலியை என்னுடையதாக உணர்கிறேன். இதனால் இந்த விரத போராட்டத்தை துவக்குகிறேன் என நாகூசாமல் புளுகி உள்ளார் நாடக அரங்கில் மோடி.

2002 கலவரத்திற்கு முன்பும், பின்பும் முஸ்லீம்கள் குஜராத் அரசு அதிகாரத்தில் எத்தனை பேர் அமரத்தப்பட்டுள்ளனர் ? குஜராத்தில் மோடியின் ஆசீர்வாதத்துடன் இயங்கும் பிரபல கம்பெனிகளில் எத்தளை முஸ்லீம்கள் உயர் பெறுப்பில் அமர்த்தப் பட்டுள்ளனர்

2002ன் கலவரத்தில் வீடு வாசல்களை இழந்து அனாதை ஆஸ்ரமங்கிளில் அடிப்படை வசதிகள் இல்லாமல் பல வருடங்கள் அனாதைகளாய் கிடந்து அல்லல் பட்ட முஸ்லீம்களில் எத்தனை ஆயிரம் பேருக்கு வாழ்வாதார வசதிகளை செய்து கொடுத்தார் என்றப் புள்ளி விபரங்களை வாசித்துக் காட்டி விட்டு மேற்காணும் அனைவருக்கும் சமநீதி கிடைக்க நான் பாடுபடுகிறேன். என்றுக் கூறி இருந்தால் திருந்தி இருக்கிறார் என்று நம்பலாம் ?

அண்ணா ஹசாரேவின் உண்ணாவிரதத்தை உலக சாதனையைப் போல் எழுதி வருவதைக் கண்ட மோடி வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் பதவிக்கு தன் பெயரும் அடிப்பட்டு வருவதை அறிந்து ஓட்டுக்காக நாக்கை தொங்கப் போட்டுக்கொண்டு முஸ்லீம்களிடம் வாலாட்டிக் கொண்டு வரவிருக்கிறார். அது தான் இந்த உண்ணாவிரத நாடகம் புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

நரபலி மோடியின் நாடக மேடை கூடுதல் கலை கட்டுவதற்காக தமிழகத்திலிருந்தும் ஜெயலலிதா தனது பிரதிநிதிகைளை அனுப்பி உள்ளார்.   

அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.2:10

''பூமியில் குழப்பம் செய்யாதீர்கள்!'' என்று அவர்களிடம் கூறப்படும் போது ''நாங்கள் சீர்திருத்தம் செய்வோரே'' எனக் கூறுகின்றனர்.2:11

கவனத்தில் கொள்க! அவர்களே குழப்பம் செய்பவர்கள்; எனினும் உணர மாட்டார்கள்.2:12



وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ


3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்